இயக்குனர் வெங்கட்பிரபு வலிமை படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாரி பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
#Valimai Movie Second Single Coming Soon ! Yuvan Ready Panitaru❤️🔥 – @vp_offl
Via @TFC_mass pic.twitter.com/rAkSX7e93Y
— AJITHKUMAR FANS ONLINE (@AKFansOnline) August 11, 2021
இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு ‘வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிளை யுவன் ரெடி பண்ணிவிட்டார். விரைவில் இரண்டாவது சிங்கிள் வெளியாகும். அதேபோல் மாநாடு படத்தின் இரண்டாவது பாடலும் வருகிறது’ என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.