வறுமையினால் தாயே தனது 5 மாத குழந்தைக்கு பூச்சி மருந்து கலந்த பாலை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பார்ப்பன்குளத்தை சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா-யாஸ்மின் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரான சாதிக்பாஷா கொரோனா ஊரடங்கில் வேலை இழந்து கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார். குடும்பத்தில் வறுமை அதிகரிக்க யாஸ்மினிடம் குழந்தைகளை எப்படி வளர்க்க போகின்றோம் என சாதிக்பாஷா புலம்பியுள்ளார்.
இந்நிலையில் பெண் குழந்தையை வளர்ப்பது கடினமான செயல் என்று நினைத்த யாஸ்மின் தான் பெற்ற 5 மாத குழந்தையை கொலை செய்ய முடிவெடுத்தார். இதனால் வறுமை தெரியாமல் பசிக்கு அழுத குழந்தைக்கு தான் பெண் என்பதையும் மறந்து பூச்சி மருந்து கலந்த பாலை கொடுத்துள்ளார்.
பாலை குடித்துவிட்டு தூங்கிய குழந்தை காலையில் கண் விழிக்கவில்லை தூக்கத்திலேயே உயிரிழந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை இறந்ததை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உறவினர்களுடன் சேர்ந்து தானும் அழுவது போல் நடித்துள்ளார் யாஸ்மின். அதன்பிறகு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது யாஸ்மின் தான் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.