கோயில்களில் நிலுவையில் உள்ள 2,66,942 சொத்துக்களின் வருவாயை வசூலித்தால் தான் முழு சம்பளம் வழங்கப்படும் என்ற கமிஷனரின் உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோயில்களின் கீழ் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய் கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 3, 66,019 சொத்துக்களில் 99,077 சொத்துகள் மட்டுமே வருவாய் ஈட்டுகிறது. மீதமுள்ள 2,66, 942 சொத்துக்களில் இருந்து வருவாய் ஈட்ட அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாயை ஈட்ட செயல் அலுவலர்களை நியமித்து உள்ள அறநிலையத்துறை ஏலம் விடுதல், வாடகை நிர்ணயித்தல், முறையாக வசூலித்தல், ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், சொத்துக்கள் மீட்பு போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உடனடியாக வங்கி கணக்கு துவங்கி அது நிலுவையில் உள்ள சொத்துக்களின் வருவாயை ஈட்டி வரவு வைக்கவேண்டும். அதிலிருந்து 25 சதவிகிதமும் ஏற்கனவே கோயில் வருவாயை வைத்து வரும் வங்கி கணக்கில் இருந்து 75 சதவீதமும் ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்இதனால் ஊழியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுபற்றி முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்க மாநில தலைவர் ஷாஜிராவ் பேசியபோது ,பல ஆண்டுகளாக கோயில் பல ஆண்டுகளாக கோயில் சொத்துக்களின் வருவாயை ஈட்ட முடியாமல் நீதிமன்றத்தில் வழக்கு ஆக்கிரமிப்பு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது.
வருவாயை ஈட்ட வேண்டிய கடைநிலை ஊழியர் முதல் கமிஷனர் வரையிலான கூட்டுமுயற்சி. அப்படி இருக்கும்போது ஊழியர்களின் சம்பளத்தில் மட்டும் கைவைப்பது பழிவாங்கும் செயல் ஆகும். அறங்காவலர், செயல் அலுவலர் இணைந்து வங்கி கணக்கு துவங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அறங்காவலர் தான் ஒட்டுமொத்த கோயில் நிர்வாகத்திற்கும் பொறுப்பு தேவையான நிதியை கையாள அவர் செயல் அலுவலர்களுக்கு அனுமதி அளிப்பார் இது தான் முறையாகும். இணைந்து வங்கி துவங்கும்போது பிற்காலத்தில் அவளிடமிருந்து அதிகாரங்களை பறித்து செயல் அலுவலருக்கு வழங்க வாய்ப்புள்ளது. கோயில் நிர்வாகத்தை அரசு கையகப்படுத்தும் என்ற எண்ணம்பக்தர்களிடையே ஏற்படும் என கூறியுள்ளார்.