Categories
மாநில செய்திகள்

வரும் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….. காவலர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தின் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் தெரிவித்துள்ளதாவது: “தமிழக காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

அதில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் இளைஞர்கள் ஜூலை ஏழாம் தேதி முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .தேர்வுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காவலர் தேர்வில் முதல் முறையாக பொதுத்தேர்வுடன் தமிழ் மொழி தகுதி தேர்வு அரசு வழிகாடுதலின்படி நடத்தப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |