டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாய சங்கங்களுடன் பிரதமர் மோடி வருகின்ற 29ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் இன்று 32வது நாளாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் ஐந்தாம் கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததால், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வருகின்ற 29ஆம் தேதி காலை 11 மணிக்கு 40 விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வணங்கினால் போராட்டம் கைவிடப்பட்டது. இல்லையென்றால் இந்தப் போராட்டம் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.