சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு, சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு 5 இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இலவச பேருந்துகள் மாமல்லபுரம் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் எனவும், 19 இடங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10வரை இந்த சேவை தொடரும்.