பிரதமர்நரேந்திர மோடி அவர்கள் வருகிற 24ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீருக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 5-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிரிவு 37- 35 ஏ ஆகியன செயல் இழக்க வைக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக அங்கு 10-க்கும் அதிகமான கட்சிகளானது குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்த கூட்டணி தலைவர்களை சென்ற வருடம் ஜூன் மாதத்தில் பிரதமர் சந்தித்து பேசினார்.
அப்போது குப்கர் கூட்டணி தலைவர்கள் 10 அம்சகோரிக்கைகளை முன்வைத்த சூழ்நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் வருகிற 24ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டம் பாலி கிராமத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் கலந்துகொள்வதற்கு பிரதமர் காஷ்மீர் செல்ல இருகிறார். இவ்வாறு மோடி வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளானது செய்யப்பட்டுள்ளது.