Categories
மாநில செய்திகள்

வரும் 20ஆம் தேதி… குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் OPS – EPS…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் குமரி மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் அவர் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்கள்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  கீரிப்பாறை, தேவாளை மற்றும் தக்கலைஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய வருகின்ற 20ஆம் தேதி வருகிறார்கள். அதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார்கள்.

Categories

Tech |