Categories
மாநில செய்திகள்

வரும் 18,19, 20 தேதிகளில்…. இந்த 3 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்தே புயலாக நேற்று உருவாகியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.

இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. இந்நிலையில் 18, 19,20 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, ஆகிய மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |