Categories
மாநில செய்திகள்

வரும் 17-ம் தேதி விடுமுறை கிடையாது….  அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்படி முதலில் எந்த நேரத்தில் எந்த தேதியில் ரேஷன் கடைகளில் பொருள் வாங்க வரவேண்டும் என்பதற்கான விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

தகுதியுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், ஜனவரி 17ஆம் தேதியை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற ஏதுவாக வரும் 17ஆம் தேதி விடப்பட்டிருந்த உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இதர ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் வரும் 17ஆம் தேதி பெற்றுக்கொள்ளாம்.

Categories

Tech |