தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக உளது. அளிக்கும்இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் வரும் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்பிடிப்பவர்கள் 14ம் தேதிக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.