Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வருமுன் காப்போம் முகாம் ” அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை…. பயனடைந்த பொதுமக்கள்…!!

“வருமுன் காப்போம்” என்ற மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனுமந்தகுடி கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் “வரும் முன் காப்போம்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை யூனியன் தலைவர் சித்தனுர் சரவணன், மெய்யப்பன், கார்த்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மருத்துவ அலுவலர் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி முத்துராமன், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரியா, பெங்களூர் மருத்துவ அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், செவிலியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை சிகிச்சையும், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, தொற்று நோய் பரிசோதனை, கண் நோய் பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த முகாமில் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

Categories

Tech |