2021-2022 ஆம் நிதியாண்டுக்கு வருமான வரி தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் வருமான வரி செலுத்துவோர் விரைவில் வருமான வரி தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு கடைசி நாளுக்கு முன்பாகவே வருமான வரி தாக்கல் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இது விரிவாக பார்க்கலாம். கடைசி தேதிக்கு முன்னர் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் கூடுதலாக தாமதித்தால் பட்டியும் சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும்.
மேலும் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் வருமான வரி துறையிடம் இருந்து நோட்டீஸ் வரும். அதனால் தேவையில்லாத சட்ட சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு ஆகியவற்றை சந்திக்க நேரிடும். மேலும் வருமான வரி தாக்கலில் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் வங்கியில் கடனுக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம். வருமான வரி தாக்கல் அறிக்கையை வருமானச் சான்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது பல நாடுகள் தரப்பில் வருமானவரி தாக்கல் ஆவணங்கள் கோரப்படுகிறது. எனவே விசா பெறுவதில் தடைகளை தவிர்க்க வருமான வரி தாக்கல் செய்வது நல்லது.கடைசி தேதி முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கு முன்பாக வருமான வரி தாக்கல் செய்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலையை நீங்கள் எளிதில் ஆன்லைன் மூலமாகவே முடிக்கலாம். இதோ அதற்கான முழு விவரம்.
ஆன்லைனிலேயே வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி?
- முதலில் https://incometaxindia.gov.in/Pages/default.aspx இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- பிறகு உங்கள் பான் எண் வைத்து Log in செய்யவும்.
- உரிய ஆண்டின் (2021-22) கீழ் ‘Download’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அதில் ITR-1 (Sahaj) படிவத்தை கிளிக் செய்யவும். உங்கள் படிவம் Excel வடிவில் டவுன்லோடு செய்யப்படும்.
- படிவத்தை திறந்து Form-16 படிவத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- விவரங்களை கணக்கிட்டு Excel படிவத்தை ‘Save’ செய்யவும்.
- பிறகு இணையதளத்தில் ‘Submit Return’ ஆப்ஷனை கிளிக் செய்து Excel Sheetஐ அப்லோடு செய்யவும்.
- உங்களிடம் டிஜிட்டல் கையொப்பம் கேட்கப்படும்.
- தற்போது வருமான வரித் தாக்கல் முழுமையாக நிறைவேறியது என்ற செய்தி வரும்.
- இதற்கான Acknowledgement உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.