வருமான வரி தொடர்பான புதிய விதிமுறைகள் ஏப்ரல்1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வருமான வரி தொடர்பான புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது கிரிப்டோகரன்சி கள் மூலம் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 30% கிரிப்டோ வரி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. கிரிப்டோ வரி மட்டுமல்லாமல் NFT போன்ற டிஜிட்டல் சொத்துக்களும் 30 சதவிகிதம் வரை வரி உண்டு.
பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்ததால் வட்டி தொகைக்கு வரி விதிக்கப்படும், எனவும் இதற்காக வரிக்குட்பட்ட தொகை, வரிக்கு உட்படாத தொகை என EPFO கணக்கு அறிக்கையில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அப்டேட்டட் வருமான வரி ரிட்டன்களை (Updated income tax returns) தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்படி இனி அப்டேட்டட் வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்யலாம். ஒரு மதிப்பீட்டு ஆண்டு (Assessment year) முடிந்தபின் இரண்டு ஆண்டுகள் வரை அப்டேட்டர் ரிட்டன் தாக்கல் செய்யலாம். ஏற்கெனவே நீங்கள் செய்த தவறுகள், விடுபட்ட தகவல்களை அப்டேட்டட் ரிட்டனில் சரிசெய்துகொள்ளலாம்.