2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கால அவகாசம் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே அதற்குள் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக செய்யுமாறு வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.