நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது 2021-2022 வருடத்திற்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்-30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019- 2020ம் ஆண்டிற்கான காலஅவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவகாசம் மே மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக செப்-30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.