2004, 2009 வருடங்களில் மக்களவைக்கும் 2014, 2020 போன்ற வருடங்களில் மாநிலங்கள் அவைக்கும் போட்டியிட்ட சரத் பவார் அப்போது அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் சரத் பவார் கூறியுள்ளார்.
5 வருடங்களுக்கு முன்பு வரை அமலாக்கத்துறை என்னும் பெயரையே தாங்கள் கேள்விப்பட்டது இல்லை என தெரிவித்துள்ள அவர் தற்போது உங்களுக்கு பின்னால் அமலாக்கத்துறை இருக்கும் என கிராமத்து மக்களை கிண்டல் செய்யும் அளவிற்கு அமலாக்கத்துறை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் செய்துள்ளார். இதே போல் வருமான வரித்துறை தனக்கும் ஒரு காதல் கடிதம் அனுப்பியுள்ளது என கிண்டல் செய்துள்ள சரத் பவார் தேர்தல் செய்த வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.