Categories
சினிமா தமிழ் சினிமா

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில்…. டான்ஸ் ஆடிய ஹன்சிகா…. வெளியான வைரல் வீடியோ….!!!!!

பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா தன் தொழில் பங்குதாரரான சோகைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்கள் திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சோகைல் கதுரியா பிரான்சின் ஈபிள் டவர் முன்னால் நின்று காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை ஹன்சிகா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோகைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் எனும் தகவல் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்ற 6 ஆண்டுகளுக்கு முன் ரிங்கி என்பவரை சோகைல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையில் ஹன்சிகாவின் நெருங்கிய தோழி ரிங்கி என்பதால் அவரது திருமணத்தில் ஹன்சிகாவும் பங்கேற்று இருக்கிறார். அத்திருமணத்தில் மணமக்களுடன் இணைந்து ஹன்சிகா நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |