சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா-ஜப்பான் ஆய்வகம், ரிகா இன்ஸ்ட்டியூட் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன், ஜப்பான் கியோ பல்கலைக்கழகத்தின் இந்தியா-ஜப்பான் ஆய்வகத்தின் இயக்குனர் ரஜிப் ஷா, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதர் டகா மசயுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இந்த ஒப்பந்தம் மூலம் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க இந்தியா, ஜப்பான் கூட்டு முயற்சிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.