வரி மற்றும் வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டுமென நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றது. அதாவது பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகள், ஆடு வெட்டும் கிடங்குகள், சுங்கம், தினசரி சந்தை, வாரச்சந்தை, கடைகள் போன்றவைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்த வேண்டியது இருந்தால், அதை உடனடியாக செலுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்றவைகளும் உடனடியாக செலுத்த வேண்டும் என ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு விடப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்தாவிட்டால் உடனடியாக ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.