Categories
உலக செய்திகள்

வரிபுலியுடன் வம்பு சண்டைக்கு சென்ற நாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!

வனவிலங்குகள் பொதுவாக காட்டில் உள்ள பிற விலங்குகளுடன் சண்டை இட்டுக் கொள்வது வழக்கமாகும். அது இரைக்காகவோ அல்லது இது எங்க ஏரியா இன்று உறுதி செய்வதற்காகவோ இந்த மோதல் நடைபெறுகிறது. இவற்றில் நாய் மற்றும் பூனை விதிவிலக்கல்ல ஆனால் உருவத்தில் பெரிய வேட்டையாடி வாழக்கூடிய தன்மை கொண்ட வரிப்புலி ஒன்றுடன் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான கோல்டன் ரிட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று வம்பு சண்டைக்கு சென்ற வீடியோ ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அனிமல்ஸ் பவர் என்னும் பெயரிலான இன்ஸ்டாகிராம் பதிவு பக்கத்தில் வெளியான இந்த வீடியோவில் சிங்கம் ஒன்று அமர்ந்துள்ளது. அதன் முன்னே பார்த்தபடி வரிப்புலி ஒன்று அமர்ந்திருக்கிறது அதன் அருகே நாய் ஒன்று செல்கிறது. இந்த நிலையில் திடீரென புலியின் காது ஒன்றை நாய் வாயில் கவ்வி கொள்கிறது. அதனை விடாமல் நாய் பிடித்து இழுக்கிறது அதுவரை பொறுமையாக இருந்த புலி சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல் நாயை தனது முன்னங்கால்களைக் கொண்டு அடிக்க பாய்கிறது. இருப்பினும் நாய் தனது பிடியை விடாமல் இருக்கின்றது இந்த வீடியோவை 4.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு இருக்கின்றனர் மேலும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து இருக்கின்றனர்.

Categories

Tech |