மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற 2 பேர் வெயில் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை நாட்டில் கொரானாவுக்கு பின்னர் பொருளாதாரம் பல்வேறு ஏற்றத்தாழ்வை சந்தித்துள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய இலங்கை சீனாவின் உதவியை நாடியது. ஆனால் சீனாவிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கின்றது. குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் அந்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் மின்வெட்டும் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
மேலும் அந்நாட்டில் பெட்ரோல் ஒரு லிட்டர் 280 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 170 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனை அடுத்து சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் மூன்று வேளை உணவு உண்ண முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்த 2 பேர் கொளுத்தும் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.