Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வரவேற்புக்கு கூட்டிட்டு போங்க… மறுத்த கணவன்… குழந்தையுடன் விபரீத முடிவெடுத்த மனைவி..!!

திருமண வரவேற்பிற்கு அழைத்து செல்லாததால்  குழந்தையை கொன்று மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன்-தாமரைச்செல்வி. இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 அன்று தாமரைச் செல்வியின் உறவினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு குடும்ப சகிதம் 3 பேரும் சென்று வந்த நிலையில் தாமரைச்செல்வி கதிரேசனிடம் திருமண வரவேற்பிற்கு செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் கதிரேசன் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு தாமரை செல்வியை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தாமரைச்செல்வி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

Categories

Tech |