கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் ஜுகி சாவ்லா இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற 15 வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதற்கு முன்பு நடந்த சீசனில் அந்த அணி இரண்டாவது இடம் பிடித்திருந்தது.
இந்த சூழலில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்படலாம் என்று இருந்து வந்தது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த அறிவிப்பினை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சந்திரகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வழிநடத்தும் அணிகள் தான் பெரும்பான்மையான வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றுகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இதன் மூலம் 87 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது மத்திய பிரதேசம்.
ரஞ்சிக்கோப்பையில் 41 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கிங்காக இருந்த மும்பையை வீழ்த்தி வெற்றி கோப்பை மத்திய பிரதேச அணி பெற்றதற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். இதுவரையில் மும்பைக்கு 3, விதர்பாவுக்கு 2, மத்திய பிரதேசத்திற்கு 1 என மொத்தம் 6 ரஞ்சிக் கோப்பைகளை இவர் பயிற்சி கொடுத்த அணிகள் வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்..
கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் புதிய பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் இருவரும் இணைந்த கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியுள்ளார்..
🚨 We have a new HEAD COACH!
Welcome to the Knight Riders Family, Chandrakant Pandit 💜👏🏻 pic.twitter.com/Eofkz1zk6a
— KolkataKnightRiders (@KKRiders) August 17, 2022