Categories
உலக செய்திகள்

“வரலாற்று சிறப்புமிக்க ஜார்ஜ் தேவாலயம் மீண்டும் திறப்பு”…ஆர்வமாய் பார்வையிட குவிந்த மக்கள்…!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவால் செப்டம்பர் எட்டாம் தேதி அன்று உயிரிழந்துள்ளார். ராணியின் மரணத்தை தொடர்ந்து வின்ட்சர் அரண்மனை உட்பட அரச குடும்பத்தின் அரண்மனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அவரது தங்கை இளவரசி மார்க்கரெட்டின் அஸ்தியும் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள மன்னர் ஆறாம் சார்ஜ் நினைவு தேவாலயத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ராணி இரண்டாம்  எலிசபெத் கடந்த வாரம் அடக்கம் செய்யப்பட்டுள்ள பாரம்பரிய அரச குடும்ப இல்லம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டையும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வின்செர் அரண்மனையை பார்வையிடுவதற்காக கோட்டைக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் கையில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுடன் கோட்டையின் ஆடம்பரமான சுவர்களுக்கு வெளியே உள்ள தெருக்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

Categories

Tech |