Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல்முறையாக…. தொடர்ந்து 17 மணி நேரம் சாதனை…. இந்திய பெண் விமானி அசத்தல்….!!

அமெரிக்காவின் விமான அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை சோயா அகர்வால் பெற்றுள்ளார்.

வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை கிட்டத்தட்ட 17 மணி நேரம் தொடர்ச்சியாக பயணம் செய்து பெண் விமானிகள் குழு சாதனை படைத்துள்ளது. மொத்த பயண தூரமான 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடந்து சாதனை படைத்த பெண் விமானிகள் குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஜோயா அகர்வால்.

இந்த சாதனையின் காரணமாக அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் ஜோயா அகர்வால் இடம்பெற்றுள்ளார். விமான ஓட்டியின் அற்புதமான வாழ்க்கைக்காகவும், உலகெங்கிலும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. இது குறித்து ஜோயா கூறியதாவது, “அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற விமான அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |