Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத வெப்ப அலை…. 1000 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர் கொண்டு வருகின்றது.  ஸ்பெயின் நாட்டில் உள்ள  கடந்த சில நாட்களாகவே கடும் வெப்பநிலை நிலவி வருகின்றது. இங்கு நிலவும்  வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. இங்கு வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஸ்பெயின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினில் வீசிய வெப்ப அலையின் காரணமாக கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளரான ஹெர்வெல்லா கூறியதாவது, நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியது. கடந்த 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 10 நாட்களில் 1,047 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இங்கு உயிரிழந்தவர்களில்  672 பேர் 85 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 241 பேர் 75 முதல் 84 வயதுக்குட்பட்டவர்கள், என்றும் 88 பேர் 65 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். மேலும் சுவாசம்  மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  இளைஞர்களுக்கு  எந்தவித பாதிப்பும் காணப்படவில்லை என்று கூறினார்.  இந்தாண்டில்  ஸ்பெயினில்  ஏற்பட்ட 2-வது பெரிய வெப்ப அலையாக கருதப்படுகிறது.  மேலும் முதல் வெப்ப அலையை கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி ஒரு வாரமாக நீடித்துள்ளது.  இந்த வெப்ப அலையினால்  மொத்தம் 829 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |