பாகிஸ்தான் நாட்டிற்கு ஐநா சபை நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இங்கு வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பால் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பஞ்சாப், கைபர், பலுச்சிஸ்தான், சிந்த் ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் 343 குழந்தைகள் உட்பட 1033 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெள்ள பெருக்கினால் பல்வேறு மக்கள் பாதிக்கப்படுவதால் பாகிஸ்தானிற்கு ஐநா சபை வெள்ள நிவாரண நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை 1280 கோடி ரூபாயை ஐநா சபை வழங்குகிறது. மேலும் இங்கிலாந்து நாடும் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.