துருக்கியில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்புயல் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் கிட்டதட்ட 16 மில்லியன் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையம் மூடப்பட்டது. அதாவது ‘பனி’ காற்றுடன் சேர்ந்து மழைபோல் கொட்டியதால் அந்த விமான நிலையத்தின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் 10.00 GMT வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி மையங்கள், பள்ளிகள், அரசாங்க நிறுவனங்கள் என அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.