Categories
மாநில செய்திகள்

“வரம்பு மீறும் பிராங்க் வீடியோக்கள்”…. காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்…..!!!!

சென்னையில் பிராங்க் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் youtube சேனல்கள் அதிகரித்து வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிராங்க் வீடியோக்களை வெளியிடும் youtube சேனல்களை முடக்கி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரோஹித் என்பவர் புகார் அளித்துள்ளார் . அதில் முதியோர் மற்றும் பெண்களை துன்புறுத்தும் வகையில் சில youtube சேனல்கள் பிராங்க் வீடியோ எடுத்து வருகின்றது. இதனால் தமிழ் கலாச்சாரம் சீரழிந்து பலர் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றன. இது போன்ற சேனல்களை உடனடியாக நீக்கி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |