Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை கொடுமை” நண்பர்களுடன் கணவன் செய்த செயல்…. மனைவியின் பரிதாப நிலை…!!

வரதட்சணை கேட்டு மனைவியை  கணவன் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் உமரியா கிராமத்தை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளை பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் சென்ற ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்ததிலிருந்து அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கணவன் கொடுமை செய்துள்ளார். வீட்டினுள்ளே சேர்க்காமல் அந்தப் பெண்ணை வெளியே படுக்க வைத்து உள்ளனர்.

இதனால் அடிக்கடி அந்தப் பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். ஆனால் கணவன் வீட்டில் இருந்து வருபவர்கள் சமாதனம் செய்து கூட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வரதட்சணை கேட்டு உச்சகட்டமாக அந்தப் பெண்ணை கணவன் மற்றும் அவனது நண்பர்கள் கரும்பு வயலுக்கு இழுத்துச்சென்று கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

பின்னர் படுகாயமடைந்த அந்த பெண்ணை அங்கேயே விட்டுச் சென்றனர். இதனையடுத்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அந்தப் பெண் தனது பெற்றோருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்ற அதிகாரிகள் பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |