வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண்ணின் கணவன் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர் .
திருவாரூர் மருதப்படினத்தை சேர்ந்த அருண் என்பவரது மனைவி மைதிலி சென்ற வியாழக்கிழமை தீக்குளித்தார் . இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 80 % தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார் . ஆபத்தான நிலையில் சிகிக்சை பெற்று வரும் மைதிலியிடம் மாவட்ட குற்றவியல் நடுவர் வாக்குமூலம் பெற்றார் .வாக்குமூலத்தில் தனது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமை படுத்தியதாக கூறினார் .
அதை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டிய கணவர் மாமனார் இருவரின் மீது வழக்கு பதிவு செய்த வைப்பூர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதி மன்ற காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து நாகை சிறையில் அடைக்கப்பட்டனர் .