Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமையால்…. புதுப்பெண் தற்கொலை…. மாப்பிள்ளை வீட்டாரை தூக்கிய போலீஸ்…!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை  சேர்ந்தவர் பாரத். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வினோதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் வினோதா 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது அவரை வரதட்சணை கேட்டு பாரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காரணத்தினால் வினோதா மன உளைச்சலுக்காளாகி கடந்த மாதம் 29 ஆம் தேதி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வினோதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வினோதாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பாரத், அவரது தாய் ஜோதி, அக்கா பரிமளா ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் புதுப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதனால் இந்தக் குற்றங்களுக்கு எதிராக தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பு போன்ற பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |