வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கலூரி சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு காலனி பகுதியில் புகழ்வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் புகழ்வேந்தன் கடந்த 2018-ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டரான சசிரேகா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புகழ்வேந்தன் சசிரேகாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததோடு, தாய் வீட்டிற்கு சென்று பணம் மற்றும் நகையை வாங்கி வருமாறு கூறி தகராறு செய்து வந்துள்ளார். இதுகுறித்து சசிரேகா தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புகழ்வேந்தனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.