Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை… பெண் பொறியாளர் அளித்த புகார்… கணவர், மாமியார் மீது வழக்குபதிவு…!!

பெண் உதவி பொறியாளரை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் மற்றும் மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள காந்திநகரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது தேனி மாவட்டம் போடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி தேனி பொதுபணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் அவரது தாயார் சந்திரலேகா இருவரும் இணைத்து ராஜேஸ்வரியை வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ராஜேஸ்வரி பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயருக்கு எழுதி வைக்கும்படி கார்த்திக் கேட்டு அவர் பணிபுரியும் இடத்திற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய கணவரையும், மாமியார் சந்திரலேகா ஆகிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |