பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கீழத்தாளனுர் கிராமத்தில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணமாகி சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வினோத்குமார் வரதட்சணை கேட்டு சங்கீதாவை கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கீதா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சங்கீதாவின் தந்தை திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.