வயிற்று வலியால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் மேலவீதியில் கூலி தொழிலாளியான நித்தியானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கதிரவன் என்று மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நித்தியானந்தன் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வலி தாங்கமுடியாமல் நித்தியானந்தன் வீட்டிலுள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனைகண்டு நித்யானந்தரின் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்யானந்தனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.