குளத்திற்கு சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது தந்தையுடன் வயலில் வேலை பார்க்க சென்றுள்ளார். அதன்பின் அருகிலுள்ள குளத்தில் கை,கால்களை கழுவிவிட்டு வீட்டிற்கு செல்வதாக கார்த்திகேயன் அவரது தந்தையிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார். இதனையடுத்து குளத்தில் கால் கழுவி கொண்டிருந்தபோது கார்த்திகேயன் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கிவிட்டார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் கார்த்திகேயன் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கார்த்திகேயன் கொண்டுசென்ற வாலி மட்டும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயனின் தந்தை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கார்த்திகேயனை சடலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.