Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற பெற்றோர்… 7-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஏழாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காடூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான முருகானந்தத்திற்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மூத்த மகள் சிவரஞ்சனி கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் செல்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவரஞ்சனியிடம் அவரது பெற்றோர் கடந்த 4-ஆம் தேதி சமைத்து வைக்குமாறு கூறிவிட்டு வயலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் சிவரஞ்சினி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவரஞ்சனி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து குன்னம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |