மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நடுக்குத்தகை அருந்ததிபாளையம் பகுதியில் பெயின்டரான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராஜ் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது மின்சார வயர் அறுந்து கிடப்பதாக நாகராஜின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நாகராஜ் பிளாஸ்டிக் டேப்பை வைத்து அறுந்து கிடந்த வயரை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.