தமிழ்நாட்டில் காலியாக உள்ள வயர் மேன் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
தமிழகத்தில் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பாமல் இருந்து வந்தது. தமிழக மின்வாரியத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி வயர் மேன், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. வயர்மேன் பிரிவில் பயிற்சி பெற்ற குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் வரும் 26 ஆம் தேதிக்குள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2642041, 88385 83094 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.