திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். திருமணம் செய்ய புரோக்கர்களை நாடி திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டியை சேர்ந்த புரோக்கர் மூலமாக 25 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது பெண்ணுக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என்று கூறி திருமணம் நடந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மணப்பெண்ணுக்கு வேண்டிய நகைகள் அனைத்தையும் மணமகன் வீட்டாரே போட்டுள்ளனர். ப்ரோக்கர் இருக்கும் கமிஷனாக 60 ஆயிரம் வழங்கினார். புரட்டாசி மாதம் என்றும் கூட பாராமல் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் திருமணமான ஒரு நாள் மட்டுமே மணமகன் உடன் குடும்பம் நடத்திய பெண் மறுநாள் பட்டுப் புடவையுடன் காரில் ஏறி வெளியே சென்றுள்ளார்.
அதன்பிறகு வீடு திரும்பவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. புரோக்கருக்கு போன் செய்தாலும் சரியான பதில் அளிக்கவில்லை. அதனால் விரக்தியடைந்த மணமகன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்ல முடியாமலும் போலீசில் புகார் அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. திருமணமான ஒரே நாளில் மணமகள் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.