மக்கள் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு போட்டியை கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார். இந்நிலையில் எனது வாக்கு எனது எதிர்காலம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு போட்டி நடத்தபடும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் அளித்துள்ள பேட்டியில் வினாடி வினா, காணொளிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப் பட வடிவமைப்பு , வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற இருப்பதாகவும், வயது வரம்பின்றி அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுதும் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை 6 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மற்றும் வேட்டி, துண்டு, சேலை ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.