Categories
மாநில செய்திகள்

வன்னியர் இட ஒதுக்கீடு…. அதிமுக சரமாரி குற்றசாட்டு…. பதிலடி கொடுத்த திமுக…..!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது “கொரோனா பேரிடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கக்கூடிய பொதுமக்களுக்கு சொத்துவரி உயர்வு பெரும் சுமையை ஏறபடுத்தி இருக்கிறது. இதில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுவிவகாரத்தில் திமுக சார்பில் கோர்ட்டில் சரியாக வாதாடவில்லை. மேலும் முறையான தரவுகளை கோர்ட்டில் சமர்பிக்காத காரணத்தினாலேயே இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலஅபகரிப்புக்கு என தனிப்பிரிவு தொடங்கினார். இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் நிலஅபகரிப்புகள் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக கஞ்சா புழக்கத்தை தடுக்க டிஜிபி உத்தரவிட்ட போதிலும் பள்ளி, கல்லூரி அருகிலேயே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் “வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவுக்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவெடுத்த அதிமுக ஆட்சிக்குத் தலைமைவகித்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி அரசு முறையான தரவுகளை கோர்ட்டில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக மீது பழி சுமத்தி இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |