செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. திமுக பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை பிறப்பித்து நடைமுறைக்கு வந்தது. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் அவசர அவசரமாக அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவும், பாமகவும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று திடுதிப்பென்று முடிவெடுத்தார்கள், அறிவித்தார்கள்.
இது சட்டப்படி நாளைக்கு பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அன்றைக்கு விடுதலை சிறுத்தை கட்சி சுட்டிக்காட்டினோம். தென்மாவட்டங்களில் இது தொடர்பான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதும், அன்றைய துணை முதல்வர் மதிப்பிற்குரிய ஓபிஎஸ் அவர்கள் இது ஒரு தற்காலிக ஏற்பாடாக அடிப்படையில் செய்யப்பட்டிருக்கிறது.இது சட்டப்படி செல்வதற்கு வாய்ப்பில்லை என்பது அடிப்படையில் ஒரு கருத்து சொன்னார். ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இது இப்படிதான் முடியும் என்பதை தெரிந்து இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.
ஓட்டுக்காக வன்னியர் சமூக மக்களை ஏமாற்றுவதற்காக அவர்கள் ஆடிய நாடக அரசியல் இதிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. தமிழக அரசு வன்னியர் சமூகத்திற்காக சமூக நீதியை பாதுகாக்கும் என்று அறிவித்திருப்பதை விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்துகிறது. அதேவேளையில் ஏன் இந்தச் சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிற காரணங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் ஒன்று. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.