தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு நடந்த ஆறு போராட்டங்களும் அபாரமானவை. தமிழகத்தில் வன்னிய தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி. மிக பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அமைச்சர்களுடன் பாமக குழு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அதனால திமுக மற்றும் பாமக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தகவலும் விரைவில் வெளியாக உள்ளது.