இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது அதிகரித்து விட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியில் தனியாக விடுவதற்கு பயப்படுகிறார்கள். அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் திருந்தியபாடில்லை.
இந்நிலையில் புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கீழ்சாத்தமங்கலத்தில் உள்ள வாத்து பண்ணையில் சிறுமிகளை அடைத்து வைத்து, கூட்டு வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.