வனிதா பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் பொறாமை பட்டு வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சண்டைக் கோழியாக வளம் வந்தவர் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளிலும் 10 திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவர் தற்போது சுற்றுலாவாக தாய்லாந்திற்கு சென்றிருக்கின்றார். அங்கே ஷாப்பிங் செய்யும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்ற நிலையில் தற்போது வைரலாகி வருகின்றது. இவரின் இந்த போட்டோக்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு வைரலாகி வருகின்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், “வாழ்ந்தா இப்படி வாழனும்” என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் “சிங்கிள் மதராக உள்ள பலருக்கு நீங்கள் முன்னுதாரணம்” பாராட்டி வருகின்றனர்.