தமிழ் சினிமாவில் விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் வனிதா. நடிகை வனிதா ஆகாஷ் என்பவரை காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஜய் ஹரி என்ற மகனும், ஜோதிகா என்ற மகளும் உள்ளனர். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வனிதா விவாகரத்து வாங்கி ஆகாஷை பிரிந்தார். அதன் பிறகு மகன் அப்பாவிடம் மகள் அம்மாவிடம் வளர்ந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். அவருக்கு ஜெனிதா என்ற மகள் பிறந்தார். இரண்டாவது கணவரையும் தனிப்பட்ட காரணங்களால் வனிதா விவாகரத்து செய்தார். மகள் ஜெனிதா தாய் தந்தை இருவரிடமும் மாறி மாறி இருக்கலாம் என்று கோர்ட் தெரிவித்தது. அதன்படி ஜெனிதா தாய் மற்றும் தந்தையுடன் மாறிமாறி இருந்தார்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வனிதா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். இந்நிலையில் வனிதாவின் இரண்டாவது மகள் ஜெனிதாவை தற்போதயெல்லாம் அவருடன் அதிகம் பார்க்க முடியவில்லை. இது குறித்து பலரும் வனிதாவிடம் கேள்வி எழுப்பினர். தற்போது பேட்டி ஒன்றில் வனிதா மனம் திறந்து பேசி உள்ளார். அதில் 2 வது மகள் ஜெனிதா இப்ப அவங்க அப்பாவுடன் இருக்கிறார். அவர் நன்மைக்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன். நான் சூட்டிங்கில் பிஸியாக இருக்கேன். ஜெனிதா ஹைதராபாத்தில் அவர் பாதுகாப்பாக ஃபீல் பண்றா. அவளை பார்த்துக்க ஆள் இருக்காங்க. அங்கு அவளுக்கு இன்னும் சௌகரியமாக இருக்கும். நானும் அடிக்கடி ஐதராபாத் போய் அவளை பார்த்துட்டு வரேன். மேலும் டெய்லி போன்ல பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.