Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை….!!

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வழியாக சொல்லும் வாகன ஓட்டிகள் யானை, மான் போன்ற விலங்குகளை புகைப்படம் எடுக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சத்தமிடுவதால் கோபத்தில் யானைகள் அவர்களைத் தாக்க முற்படுவதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் மலை உச்சியில் நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பதுடன், நீரோடைகளில் இருக்கும் பாறை மீது அமர்ந்து மது குடிக்கின்றனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுகிறது. இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குனர் சங்கர் கூறும்போது, மனிதர்கள் தேவையற்ற செயல்களை செய்வதால் விலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. இதனை அடுத்து வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |